ஓம் சரவணபவ
அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் அடிமை சித்தர் சாமிகளின் ஸ்ரீ பாலமுருகன் கோவில்.
கொப்பம்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் உயர் திரு சித்தர் சாமிகள் அவர்களால் கட்டப்பட்டு ஸ்ரீ பாலமுருகன் எழுந்தருளியுள்ளார்.
பூலோகத்தில் எல்லா காலகட்டங்களிலும் முருக பெருமான் ஏதாவது ஒரு வகையில் தோன்றி மக்களை காத்து வந்துள்ளார். அவ்வகையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்திலும் குளத்தூர் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம், கொப்பம்பட்டியில் ஸ்ரீ பாலமுருகப்பெருமான் தோன்றி மக்களை காத்துக் கொண்டிருக்கிறார். அவ்வூர் மக்கள் மட்டும் இன்றி உலக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அருள்பாலித்து வருகிறார். இறைவன் அருள் பாலிக்க உள்ளம் தேவை உள்ளம், அவ்வகையில் நமது அன்பான அப்பா கொப்பம்பட்டி சித்தர் ஸ்ரீ பாலமுருகன் அடிமை அவர்களை தேர்ந்தெடுத்து அவர் மூலமாக மக்களின் துயர்களை துடைத்து அருள் பாலிக்கின்றார்.
விஞ்ஞானமாயையில் இருக்கும் உலக எதார்த்தத்தின் இடையில் மெய்ஞான குருவாக நமது அப்பா மக்களுக்கு அருள் வாக்கு சொல்லி அவர்களது துன்பங்களையும் வியாதிகளையும் போக்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அளிக்கின்றார்.
இவ்வாறாக அப்பாவின் அருள்வாக்கு பிரதி ஞாயிறு செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் நமது கொப்பம்பட்டி ஆலயத்தில் நடைபெற்று வருகின்றது.
அருள் வாக்கு மூலம் பலன் பெற விரும்பும் மக்கள் நேரடியாக ஆலயத்திற்கு அந்த மூன்று கிழமைகளில் வந்து தரிசித்து பயன் பெற்று செல்லலாம். அதுமட்டுமில்லாமல் அப்பா ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அளித்து வருகிறார் இலவச திருமணம் தனது சொந்த செலவில் செய்து வருகிறார், மேலும் ஏழை குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைக்கின்றார், பல அனாதை ஆசிரமங்களுக்கு உதவிக்கரங்களை நீட்டி வருகிறார். பலன் பெரும் மக்கள் அவரது பொது மக்கள் சேவையில் தங்களால் இயன்ற பங்கை எடுத்துக் கொள்ளலாம் மக்கள் சேவையை மகேசன் சேவை.
வருகின்ற வைகாசி மாதம் 25ஆம் நாள் ஜூன் மாதம் 8ஆம் தேதி ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது முருக பக்தகோடிகள் அனைவரும் மாபெரும் விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ பாலமுருகன் திரு அருளையும் அப்பாவின் ஆசிகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ அழைக்கின்றோம்.
இந்த மாபெரும் திருப்பணிக்கு பொருள் உதவி செய்ய விரும்பும் பக்த கோடிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். 9585406407
கும்ப முழுக்க தினத்தன்று நம் காவல் தெய்வம் "ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பர்" அவர்களும் இவ்வாலயத்தில் மிகப்பிரமாண்டமாக எழுந்தருள உள்ளார். கருப்பசாமி திருப்பணிக்கு பொருள் உதவி செய்ய விரும்பும் மக்களும் இந்த எண்ணிற்கு 9585406407 தொடர்பு கொள்ளவும்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏
காவல் தெய்வம் கருப்பசாமிக்கு அரோகரா

